நீண்ட… தாமதத்திற்குப் பிறகு..   காவிரி நடுவர் மன்ற தலைவர் நியமனம்

டில்லி:

டந்த இரண்டு வருடமாக நியமிக்கப்படாமல் இருந்து வந்த காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு  உச்சநீதி மன்ற நீதிபதி சப்ரே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் காவிரி நடுவர் மன்றத்துக்கு தலைவர் விரைவில் நியமிக்ககப்படுவார் என மத்தியஅரசு தெரிவித்திருந்தது. காவிரி நடுவர் மன்ற வழக்கு நாளை உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது தற்போது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். வரும் 2019ம் ஆண்டு ஆகஸ்டு வரை இவர் பணியில் இருப்பார். சபரே இதற்கு முன்னர்  மத்தியப் பிரதே மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர்.

கர்நாடகா, தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே நடுவர்மன்றம்  தீர்ப்பு கூறியுள்ளது. அதை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் நடுவர்மன்றத்தில் முறையிட்டன.

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு  நடுவர்மன்ற தலைவராக இருந்த என்.பி.சிங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் இரண்டு ஆண்டுகள் அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. அதற்குபிறகு ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதி பல்பீர் சிங் சவுகான் 2014ம் ஆண்டு நியமிக்ககப்பட்டார். பின்னர் அவர் 21வது சட்ட கமிஷன் தலைவராக மாற்றப்பட்டார். இதனால் மீண்டும் காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவி காலியாக இருந்தது.

இதையடுத்து நாளை காவிரி வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இன்று காவிரி நடுவர் மன்றத் தலைவராக நீதிபதி அஜய் மனோகர்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவிரி வழக்கு மார்ச் 21–ந் தேதி முதல் ஏப்ரல் 11–ந் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த 3 வாரங்களில் தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்ககது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: appointed after long delay, Cauvery tribunal chairman, நீண்ட… தாமதத்திற்குப் பிறகு..   காவிரி நடுவர் மன்ற தலைவர் நியமனம்
-=-