சென்னை:

காவிரி நதிநீர் மேல்முறையீட்ட  வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு இழைத்த அநீதி என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவரான திமுகவை சேர்ந்த துரைமுருகன் கூறும், காவிரி வழக்கில் உச்சநீதி மன்றம் தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளது என்றும், தமிழக அரசுக்கு இது பெரும் பின்னடைவு என்றும் கூறி உள்ளார்.

தமிழக அரசு சரியானபடி வழக்கறிஞர்கள் வைத்து வாதாடததால், தமிழகத்திற்கு இதுபோன்ற தீர்ப்பு வந்துள்ளது என்றும், கலைஞர் போராடி பெற்ற தீர்ப்பு தமிழக அரசின் கையாலாகாத தனத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவை குறைத்துள்ளது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு என்றும் இதன் காரணமாக அதிமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் கூறி உள்ளார்.