காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது…ரஜினி டுவிட்

சென்னை:

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இது குறித்து நடிகர் ரஜினி தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘‘காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் உள்ளது.

இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.