காவிரி வழக்கு: தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் அறிவிப்பு

டில்லி:

காவிரி நீர் பிரச்சினையில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்தும், கர்நாடகாவுக்கு அதிகரித்தும்  உத்தரவிட்டது.

இந்நிலையில், காவிரி வழக்கை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும்  தீர்ப்பு குறித்து வழக்கறிஞரிடம் பேசிவிட்டு கருத்தை தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு கர்நாடக சட்ட கவுன்சிலும் வரவேற்பு தெரிவித்து உள்ளது.

காவிரி வழக்கில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.