மேட்டூர்:

ர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, உபரி நீர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும், விநாடிக்கு 8 ஆயிரத்து 300 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நேற்று அதிகாலை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, இன்று காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது.  இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,500 கன அடியாக தண்ணீர் வந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.