தஞ்சை:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து, டெல்டா பாசன பகுதிகளில் இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக டெல்டா பகுதிகள் முழுவதும் கடைகள்அடைக்கப்பட்டு இருந்தன. மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் 192 டிஎம்சி தண்ணீர்  தர வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடக அரசு சரியாக தருவதில்லை.  காவிரியில் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், மேட்டூர் அணையில்இருந்து பபாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இதன் காரரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளாக  குறுவை சாகுபடி சரிவர நடைபெறவில்லை.
காவிரி
இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்து உள்ளார். இதனால் இந்த ஆண்டு சம்பா சாகுபடியும்  கேள்விக்குறியாகி விட்டது. கர்நாடக அரசு இந்த பாசன ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதத்தில் 94 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். அதில் கடந்த  மாதம் 26ம் தேதி வரை சுமார் 23 டிஎம்சி அளவுக்கே  கர்நாடகம் தண்ணீர் கொடுத்து உள்ளது. மீதமுள்ள 71 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசு பெற்று தந்தால் டெல்டா  மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி தொடங்கி விடலாம்.
இந்த தண்ணீரை உடனடியாக பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வலியுறுத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரிமேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடக அரசின் நீதிமன்ற அவமதிப்பை  கண்டிப்பது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு திமுக, தமாகா,மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள்  ஆதரவு தெரிவித்து உள்ளன.
விவசாயிகள் மறியல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   மதியம் வரையில் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.