‘காவிரி நீர் பெறுதல் நம் உரிமை’: நடிகர் விவேக் டுவிட்

சென்னை:

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி வரைவு அறிக்கை தாக்கல் செய்ய கொடுக்கப்பட்டுள்ள கெடு முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டதை தொடர்ந்து மனுவை திரும்பப் பெற்றது மத்திய அரசு.

மத்திய அரசின் காலம் தாழ்த்தும் நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

காவிரி நீர் பெறுதல் நம் உரிமை; ஆனால் உள் நாட்டு ஆறுகளை மீட்டெடுப்ப தும் நம் கடமை. மரங்களை வெட்டியதும், ஏரி குளம் தூர் வாராததும் நம் மடமை. எங்கு காணினும் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கொடுமையிலும் கொடுமை

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.