Random image

ஒரு ஆண்டுக்குப் பிறகு வரும் 25ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூடுகிறது

டெல்லி:

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக உச்சநீதி மன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், சுமார் ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு வரும் 25ந்தேதி  மீண்டும் கூடுகிறது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.  அதன்படி  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதுகுறித்து அரசிதழிலும் வெளியிட்டது.

அதைத்தொடர்து சில முறைகள் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட்டு கர்நாடகா அரசுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுமார் ஒராண்டாக கூட்டம் கூட்டப்படாத நிலையில், வரும்  25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று  டெல்லியில்  நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் 25வது கூட்டம் நடைபெற்றது.  ஒழுங்காற்று குழுவின் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில்  நடைபெற்ற இந்த கூட்டத்தில்  தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் சார்பில் தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து,  நடப்பாண்டு முழுவதும் நீர் பங்கீடு எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களின் நீர் இருப்பு, மற்றும் வரத்து ஆகியவை குறித்த புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் பிப்ரவரி அதாவது இந்த மாதம் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய மத்திய நீர்வளத்துறை தலைவர் அருண் குமார் சின்கா தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைவர் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.