சென்னை:

காவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம் வகுத்துள்ள காவிரி ஒழுங்காற்று குழு, அதன்  துணை குழுவினர் மூலம்  மேட்டூர் அணை உள்பட தமிழக அணைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அறிவுறுத்தலின் படி, துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு காவிரி நீர் பாயும் மாநிலங் களில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றத்தை கணக்கிட அமைக்கப்பட உள்ள, ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின்படி, துணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தை கணக்கிட்டு, கணினி மூலம் உடனுக்குடன் கண்காணிக்க உதவும், தானியங்கி நீர் அளவீட்டு மானி பொருத்தும் திட்டம், செயல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தரும் பணியில், துணைக்குழு வினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காவிரி நதி நிர் பாயும் இடங்கள் உள்பட மேட்டூர் அணை, பிலிகுண்டு,  தொப்பையாறு பகுதிகளை ஆய்வு செய்தனர்.  அணைக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றும் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து,  உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பகுதியிலும், முக்கிய நீர்பிடிப்பு பகுதியான தேனாறு, பாம்பாறு, சின்னாறு சேரும் இடமான ஜீரோ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று காவிரி நீர் ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இந்த குழுவில்  மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்புப் பொறியாளர் மோகன் முரளி, புதுவை பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், கேரள மாநில பாசன உதவி இயக்குநர் சஜ்வீப்குமார், இந்திய வானிலை அறிவியலாளர் அமுதா, அமராவதி அணை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்தினர்.