டில்லி:

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியதில் இருந்து எந்தவித விவாதமு மின்றி முடக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில, பிரதமர் மோடி தலைமையில்  இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பிஎன்பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, தலித் சட்ட திருத்தம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதுபோல பாராளுமன்ற அவைகளும் எதிர்க்கட்சி எம்.பி.க்களால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று  மத்திய அமைச்சரவை அவசர  கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் போது காவிரி மேலாண்மை வாரியம் உள்பட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.