சென்னை:

டிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த பிரபலமானவர்களில் ஒருவர்  கெவின்கேர் குழுமத்தை சேர்ந்த குமரவேல்.  இவர் கடலூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி உள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது விலகளுக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. திமுகவின் நெருக்குதல் மற்றும் மிரட்டல் காரணமாக அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமான கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல், கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் கட்சியில் இருந்து விலகு வதாக குமரவேல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியில்  பூசல் அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து தலைவர் கமல்ஹாசனிடம் எடுத்துக் கூறினேன். அவர் அதற்கு சரியான பதிலையும் கூறாததால், கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.

நிர்வாகக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முடிவு களில் பெரும்பாலானவை நியாயமானவை அல்ல என்று குற்றம் சாட்டியவர்,  நாம் என்ன செய்கி றோம்,, ஏன்  செய்கிறோம் என்பதை விளக்குவதற்கு கூட விருப்பபடவில்லை என்று கூறி உள்ளார்.

ஆனால், அவர் விலகளுக்கு காரணமாக கூறப்படு வது, அவரது நிறுவனமான கெவின்கேர் நிறுவனத்தில், கருணாநிதி வாரிசு ஒருவர் பங்குதாரராக இருந்து வருவதால், கட்சியில் இருந்து விலக அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குமரவேல் தமிழகம் முழுவதும் கிளை பரப்பியுள்ள  நேச்சுரல் மற்றும் ஸ்பா சலூன்களை நிறுவனத்தின் நிறுவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கடலூர் தொகுதியில் திமுக சார்பில்  வேட்பாளராக பண்ருட்டி ரமேஷ் நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக குமரவேல் மநீம கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்தார். இவரும் அந்த பகுதியில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால், திமுகவின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவரை தேர்தலில் இருந்து விலக வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாகவே மநீம கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

போதுமடா சாமி… இந்த பொல்லாத அரசியல் ……