2 ஆண்டுகளுக்குப் பின் துப்பு துலங்கிய சேலம் ரெயில் கொள்ளை

சென்னை

டந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து வந்த ரெயிலில் பழைய ரூபாய் நோட்டுக்கள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தற்போது துப்பு துலங்கி உள்ளது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு சேலம் ஐஓபி உள்ளிட்ட பல வங்கிகளில் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்கள் ரெயிலில் கடந்த 2016 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டன.  இந்த ரெயில் சென்னை எழும்பூர் வந்தபிறகு பணப்பெட்டி திறந்து  கிடந்தது தெரிய வந்தது.   ரெயில் பெட்டியின்  மேற்புறத்தில் இருந்து துளை இட்டு கொள்ளை நடந்துள்ளதாக தடவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த ரெயில் பெட்டியில் இருந்து ரூ.342 கோடி பணம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதில் ரூ.5.78,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டது.   இந்த திருட்டில் 4 பேர் கைரேகை சிக்கியது.   அதன் பிறகு எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் இருந்தது.  தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

தற்போது மொபைல் சிக்னல் மூலம் துப்பு துலங்கி உள்ளது.   இந்தக் கொள்ளையை மத்திய பிரதேசத்தை சேர்ந்த 4 அல்லது 5 பேர் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.   கொள்ளையர்களை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may have missed