நிர்மலா தேவி – முருகன்

ருப்புக்கோட்டை

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஒன்றாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீர்மானித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை தேவாங் கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஐந்தாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நிர்மலா தேவியின் போலீஸ் காவல் இன்று மதியம் 2.30 மணியோடு முடிவடைகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 குழுக்களாக பிரிந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நிர்மலா தேவி தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகிறார்கள்.

நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவரை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே போல ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இன்று நீதிமன்றத்தில் கைது சரணடைந்தார்.

இந்த நிலையில் மூவரையும் ஒன்றாக வைத்து விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி. தீர்மானித்துள்ளது.