பிரதமரின் உழவர் நிதி முறைகேடு: புகார் தர தொலைபேசி எண்களை வெளியிட்டது சிபிசிஐடி

சென்னை: பிரதமரின் உழவர் நிதி முறைகேடு தொடர்பாக புகார் தர தொலைபேசி எண்களை சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ரூ.110 கோடி அளவிற்கு  பிரதமரின் உழவர் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக, துறை சார்ந்த அதிகாரிகளே அதிகாரபூர்வமாக பல தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில்,பிரதமரின் உழவர் நிதி முறைகேடு தொடர்பாக புகார் தர தொலைபேசி எண்களை சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ளது.

044-28513500, 044-28512510 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தரலாம். 9498181035 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது.