வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும்…..வருமான வரித் துறைக்கு நேரடி வரி விதிப்பு வாரியம் உத்தரவு

--

டில்லி:

வரி வசூலை தீவிரப்படுத்த தலைமை வருமான வரித் துறை ஆணையர்களுக்கு நேரடி வரி விதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நேரடி வரி வாரிய தலைவர் சுஷில் சந்திரா வருமான வரித் துறை ஆணையர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வரி வசூலை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுஷில் சந்திரா கூறுகையில்,‘‘வரி வசூல் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கிறது. இதற்கான நடவடிக்கை டிடிஎஸ் மூலம் மேற்கொள்ளப்படவில்லை. மேற்குவங்கம், பீகார், சென்னை, நாக்பூர் ஆகிய மண்டலங்கள் எதிர்பார்த்த வகையில் வரி வசூலை மேற்கொள்ளவிலலை.
இதற்காக தலைமை ஆணையர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து பணியாற்ற வலியுறுத்தப்பட்டது.

இதை குறிப்பிட்ட கால இடைவெளியில் நான் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவேன். நிலுவையில் உள்ள முறையீட்டு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நேரடி வரி வசூல் இலக்கான ரூ.11.5 லட்சம் கோடியை நிச்சயம் அடைவோம்’’ என்றார்.