போபால்

த்திய அரசின் கைப்பாவையாக சி பி ஐ செயல்படுவதாது காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.

வியாபம் ஊழல் என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கு நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியது.   இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக 592 பேர் முதல் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருந்தனர்.   அதில் நான்கு மருத்துவக் கல்லூரி தாளாளர்களும் அடங்குவார்கள்.     கடந்த 2012ஆம் வருடம் நடந்த இந்த நுழைவுத் தேர்வில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் சம்பந்தம் உள்ளதாக பரவலாக பேசப் பட்டு வந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்பு விசேஷ நீதிமன்றத்துக்கு சி பி ஐ அளித்துள்ள குற்றப் பத்திரிகையில்  சிவராஜ் சிங் சவுகான் பெயர் இல்லை.   இதனால் அவர் நிம்மதி அடைந்தாலும் எதிர்க்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.  இது குறித்து மத்திய பிரதேஷ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா பத்திரிகையாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர், “வியாபம் வழக்கைப் பொருத்தவரை மத்திய அரசின் கைப்பாவையாக சி பி ஐ செயல்படுகிறது.   மத்திய பிரதேச முதல்வருக்கு சி பி ஐ பெரிதும் உதவி வருகிறது.   வியாபம் தேர்வு ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல்.   இதில் சிறிய மீன்கள் சிக்கி உள்ளன.  திமிங்கிலங்கள் தப்பிக்க விடப் பட்டுள்ளன” எனக் கூறி உள்ளார்/