உன்னாவ் பலாத்காரம் : எம் எல் ஏவுக்கு உதவிய பெண் கைது

க்னோ

ன்னாவ் பலாத்கார வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்திப் சிங் வீட்டுக்கு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை அழைத்து வந்த சசி சிங் பெண்மணியை சிபிஐ கைது செய்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் ஒரு மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.   அந்தப் பெண்ணின் தந்தை குல்தீப் சிங்கின் சகோதரர் தாக்கியதில் மரணம் அடைந்தார்.  அத்துடன் அந்தப் பெண் உ.பி. முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்று காப்பாற்றப் பட்டார்.

தற்போது அந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப் பட்டுள்ளது.   முதல் குற்றவாளியான குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்காக 7 நாட்கள் எடுத்துச் செல்லப்படுள்ளார்.  பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின்  தாயார் அளித்த புகாரில் தன் மகளை சசி சிங் என்பவர் குல்தீப் சிங் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும்,  குல்தீப் சிங் தன் மகளை பலாத்காரம் செய்யும் போது அந்த அறைக்கு வெளியே காவல் இருந்ததாகவும் கூறி உள்ளார்.

அதை ஒட்டி தற்போது சசி சிங் என்னும் அந்தப் பெண்மணியை சிபிஐ கைது செய்துள்ளது.   நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு அவரிடமும் விசாரணை தொடரும் எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.