சென்சார் சர்டிஃபிகேட் தர அதிகாரி லஞ்சம் வாங்கினார் : சிபிஐ

டில்லி

சிபிஐ சென்சார் போர்டில் ஜனவரி 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை அதிகாரியாக இருந்த ராகேஷ் குமார், திரைப்படங்களுக்கு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளது.

சென்சார் போர்டின் தலைவராக பணியாற்றியவர் ராகேஷ் குமார்.  இவர் பெரிய படங்கள், குறும் படங்கள், விளம்பரப்படங்கள் என எந்த ஒரு பாகுபாடுமின்றி லஞ்சம் வாங்கிக் கொண்டு உடனடியாக சான்றிதழ் வழங்கி வந்துள்ளார்.   இதன் மூலம் அவருக்கு வாரம் ரூ. 1.5 லட்சம் வருமானம் வந்துள்ளது.

ஏப்ரல் 2014 முதல் அவர் விளம்பரப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்க ரேட் கார்ட் என்னும் ஒரு முறையைக் கொண்டு வந்துள்ளார்.   அதன்படி ஒரே நாளில் சான்றிதழ் அளிக்க ரூ.10000.  இரண்டு நாளில் ரூ. 5000, மூன்று நாளில் ரூ. 2000 என ரேட் ஃபிக்ஸ் செய்துள்ளார்.  ஏப்ரல் 2 முதல் 13 வரை அவர் 174 விளம்பரப்படங்களுக்கு அனுமதி அளித்துள்ளார்.  சராசரியாக ஒரு நாளுக்கு 14 படங்கள்.

ஆனால் திரைப்படங்களுக்கான ரேட் தனி.   குமாரின் நம்பிக்கைக்குரிய ஊழியரான கிருஷ்னா பாலி அளித்த வாக்குமூலத்தின் படி, 18 முதல் 25 லட்சம் வரை ஒரு மாதத்துக்கு வசூல் நடந்துள்ளதாக தெரிகிறது.  கிருஷ்ணா மூலமாக அவர் படத் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிய பணம் எவ்வளவு என்பதும் வெளி வந்துள்ளது.

பல புகழ்பெற்ற படங்களுக்கு மட்டும் அல்ல, அந்தப் படங்களின் டீசர்களுக்கும் சான்றிதழ் அளிக்க குமார் லஞ்சம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.   இவற்றில் ஷா ருக் கான், வித்யா பாலன் போன்றோர் நடித்த படங்களும் அடங்கும்.   ஒரு படத்தின் u/A சர்ட்டிஃபிகேட்டை  U சர்ட்டிஃபிகேட்டாக மாற்ற ரூ. 20000 லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ராகேஷ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.   விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார்.  பின் ராகேஷ் குமாரை கைது செய்த சிபிஐ அவர் மேல் லஞ்சம் வாங்கிய வழக்கை பதிவு செய்துள்ளது.

ராகேஷ் குமாருடன் அவருக்கு உடந்தையாக இருந்த சர்வேஷ் ஜைஸ்வால் மற்றும் ஸ்ரீபதி மிஸ்ரா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.