தயப்பூர்,  ராஜஸ்தான்

ங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.2654 கோடி மோசடி செய்ததாக குஜராத் தொழிலதிபரையும் அவரது இரு மகன்களையும் சிபிஐ கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலம் வடோதரா நகரை சேர்ந்தவர் பட்நாகர்.  இவர் டையமண்ட் பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்னும் நிறுவனத்தை தனது இரு மகன்களான அமித் மற்றும் சுமித் ஆகியோருடன் நடத்தி வருகிறார்.   இவர் பேங்க் ஆஃப் இந்தியா,  பரோடா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளிலும் மற்றும் சில பொதுத்துறை நிறுவனங்களிலும் கடன் வாங்கி உள்ளார்.

இந்தக்கடனை திருப்பித் தராமல் மூவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.  இவர்கள் தர வேண்டிய மொத்த தொகை ரூ. 2654 கோடி ஆகும்.    இவர்களை சிபிஐ நாடெங்கும் தேடி வந்தது.   இந்நிலையில் இவர்கள் ராஜதான் மாநிலத்தில் உள்ள உதயப்பூரில் இருப்பது தெரிய வந்தது.

இவர்கள் தங்கி இருந்த உதயப்பூரில் உள்ள ஓட்டலில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இவர்களிடம்  தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.   விரைவில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.