ரூ. 2654 கோடி வங்கி கடன் மோசடி: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் கைது

டில்லி:

விதிகள் மீறி கடன் வழங்கிய விவகாரத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிகள் 2 பேரை சிபிஐ கைது நடவடிக்கை எடுத்து உள்ளது. இது முன்னாள் வங்கி அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் நடைபெற்றுள்ள பெரும்பாலான வங்கி தொடர்பான ஊழல்களுக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருவது விசாரணையின்போது தெரிய வருகிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி  2,654 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் ரூ.2,654 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, பல்வேறு சோதனைகளை  மேற்கொண்டும், கடன் வாங்கிய தனியார் நிறுவன அதிகாரிகளை கைது செய்தும் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு வங்கி விதிகளை மீறி ரிசர்வ் வங்கி  அறிவித்த பிறகும், உச்ச வரம்பையும் தாண்டி அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்ததாக பாங்க் இந்தியா வங்கியில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் 2 பேரை  நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள வங்கி அதிகாரிகளான அக்னி கோத்ரி பாங்க் ஆப் இந்தியாவில் பொது மேலாளராக பணியாற்றி வந்ததாகவும், பி.கே.ஸ்ரீவத்ஸவா , அதேவங்கியில் துணைப் பொது மேலாளராக பணியாற்றி வந்தாகவும் கூறப்படுகிறது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.