டில்லி:

இந்திய தயாரிப்பு போபர்ஸ் பீரங்கிகளில் போலி சீன உதிரி பாகங்கள் பயன்படுத்தப்ப்டடிருந்து குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

1999 கார்கில் போரில் போது இந்திய ராணுவத்தில் தனுஷ் எனப்படும் போபர்ஸ் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்தது. இவ்வகையான பீரங்கிகள் நவீன தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. போபர்ஸ் பீரங்கிகள் ஜாபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

பீரங்கிகளில் பொருத்தப்படும் உதிரி பாகங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை என கூறப்பட்டது. ஆனால், சீனாவில் தயாரிக்கப்பட்ட போலி பேரிங்குகள் உள்ளிட்ட உதிரி பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய போபர்ஸ் பீரங்கிகளின் சோதனை ஏற்கனவே முடிந்துவிட்டது. சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியினை இலக்காக கொண்டு தாக்கி நிரூபிக்கப்பட்டுள்ளது. அசல் போபர்ஸ் பீரங்கிகள் 27 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்டிருக்கும். இந்திய ராணுவம் 414 தனுஷ் பீரங்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூர் ஆயுத தொழிற்சாலையில் முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட பீரங்கிகளில், ‘வயர் ரேஸ் ரோலர் தாங்கி’ என்ற போலி சீன உதிரி பாகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என சிபிஐ விசாரணையில் தெரியவந்து உள்ளது.

டில்லியை சேர்ந்த சித் சேல்ஸ் சிண்டிகேட் என்ற ஆயுத உதிரி பாகங்கள் விநியோக நிறுவனத்திடம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் போபர்ஸ் பீரங்கிகளுக்கு உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த 2013-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இந்நிறுவனம் ஜெர்மனியில் உள்ள சிஆர்பி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்று போலியாக சீன தயாரிப்பு உதிரி பாகங்களை வழங்கி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல், மே, ஆகஸ்ட் மாதங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உதிரி பாகங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என்று கூறி போலியாக விற்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது அவை ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது இல்லை என்பது நிரூபனம் ஆகியது. அவை சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது. டெல்லியை சேர்ந்த நிறுவனம் போலியான ஆவணங்களையும் வழங்கிள்ளது.

ஜாபல்பூர் ஆயுத தொழிற்சாலை அதிகாரிகளே சிலர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக டில்லியை சேர்ந்த நிறுவனம் மற்றும் ஆயுத தொழிற்சாலையின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.