சென்னை:

ட்டவிரோதமாக ஹாங்காங்கிற்கு ரூ.1038 கோடி பணம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இவைகள் அனைத்தும் கருப்பு பணம் என்றும் கூறியுள்ள சிபிஐ,  இது தொடர்பாக  தமிழகத்தைச் சேர்ந்த 51 நிறுவனங்கள்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

உரிய ஆவனங்கள் இன்று அயல்நாடுகளுக்கு பணம் அனுப்புவது மற்றும் வெளிநாட்டு பணங்கள் அனுப்பப்படுவது குறித்து விசாரணை நடத்தி வரும் மத்தியஅரசு, அவர்கள்மீது கருப்பு பணச்சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏராளமான பணம் அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சுமார்  ரூ.1038 கோடி கருப்பு பணம் அனுப்பப்பட்டு உள்ளதாக வும், இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 48 நிறுவனங்கள் உள்பட மொத்தம் 51 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த கருப்பு பணங்கள் அனைத்தும்,  பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றின் மூலம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இதற்கு மூல காரணமாக,  முகமது இப்ராஹிம்சா ஜானி, ஜிந்தா மிதார், நிஜாமுதீன் ஆகிய 3பேர் மற்றும் , 48 நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பண பரிவர்த்தனை வங்கி அதிகாரிகள் உதவுயுடனே நடை பெற்று இருப்பதாகவும்,  இந்தப் பணம் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் செலவுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.