ரூ. 1700 கோடி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலும் ஒரு மோசடி அம்பலம்

டில்லி:

ஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி கடன் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மோசடி விவகாரம் அம்பலமாகி உள்ளது.

இந்த மோசடியில் ரூ.1700 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட  வங்கிகளின் கூட்டமைப்பிடம் கடன் பெற்று, 1,700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் தொலைதொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் விஎம்சி ((VMC)) என்ற நிறுவனத்தின் மீது சிபிஐ-இல் புகார்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில்,  விஎம்சி நிறுவனம்,  பஞ்சாப் நேஷனல் வங்யிடம் 593 கோடி ரூபாயும், பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஐே.எம் நிதி நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து 1207 கோடி ரூபாயும் கடன் பெற்றிருப்பதாகவும், இந்த கடன்களை அந்த நிறுவனம் முறைகேடாக வேறு காரணங்கள் பயண்படுத்தி பெற்றிருப்பதாகவும்.. இதுவரை  திரும்ப செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து  அந்த நிறுவனத்தை சேர்ந்த உப்பலபட்டி ஹிமா பிந்து, உப்பலபட்டி வெங்கட் ராம ராவ், பாக்வாடுலா வெங்கட் ரமனா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம்  போன்றவற்றில் சோதனை நடத்தி உள்ளது.

ஏற்கெனவே நிரவ் மோடி13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு கடன் விவகாரம் பூதாகரமான கிளம்பி உள்ளது.

இது மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.