த்ராஸ்

த்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நால்வரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு பெண் கொல்லப்பட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேசம் ஹர்ஹாஸ் பகுதியில் 20 வயதாகும் ஒரு தலித் பெண் உயர் சாதியினரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு காயங்களுடன் கண்டறியப்பட்டார்.  இந்த பகுதி டில்லியில் இருந்து சுமார் 200 கிமீ தூரத்தில் உள்ளது.  அதன் பிறகு அவர் டில்லியில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அதன் பிறகு இறந்த அந்தப் பெண்ணின் உடல் இரவோடு இரவாக காவல்துறையினரால் எரியூட்டப்பட்டது.   இந்த நிகழ்வு அவருடைய பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக நடந்ததால் நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது,.  ஆனால் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணின் பெற்றோரின் சம்மதத்துடன் அவர் உடல் எரியூட்டப்பட்டதாகக் கூறியும் போரட்டங்கள் தொடர்ந்தன.

கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டது.  அதற்கிணங்க சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கு விசாரணை மூன்று மாதமாகியும் முடியாததால் அதை உடனடியாக முடிக்க அலகாபாத் உச்சநீதிமன்ற லக்னோ கிளை உத்தரவிட்டது.

இதையொட்டி சிபிஐ அளித்த விசாரணை அறிக்கையில் ஹத்ராஸ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தது.  மேலும் இந்த வழக்கை தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமை சட்டத்தின் கீழ் பதியலாம் என தெரிவித்துள்ளது.   அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை  இந்த வழக்கை ஜனவரி 27 அன்று ஒத்தி வைத்தது.