மத்தியபிரதேச வியாபம் ஊழல் வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

போபால்:

த்திய பிரதேசத்தில் நடைபெற்ற  வியாபம் வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ம.பி. பணியாளர் தேர்வு வாரியத்தில் நடந்த ஊழல் பற்றி விசாரித்துவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவக் கல்லூரி மேற்படிப்பு போன்ற பல உயர் கல்விகளுக்காக கடந்த 2015ம் ஆண்டு மத்தியபிரதேச மாநில அரசு நடத்திய  வியாபம் தேர்வில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.  அதையொட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ம.பி தேர்வு வாரியம் நடத்தி வரும் 13 வகையான தேர்வுகளில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு.

இதுதொடர்பான விசாரணையின்போது, முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்த 634 டாக்டர்களின் பட்டத்தை உச்சநீதி மன்றம் ரத்து செய்திருந்தது.

இந்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தற்போது  2 பேருக்கு 5 ஆண்டு சிறை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.