அகமதாபாத்:

குஜராத்தில் செயல்பட்டு வரும் மேலும் ஓரு நிறுவன மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த நிறுவனம் பல வங்கிகளில் இருந்து  ரூ.2654  கோடி ரூபாய் கடன் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, நிறுவன இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பிரபலமான வைர வியாபாரியான குஜராத்தை சேர்ந்த நிரவ் மோடி, 9500 கோடி  வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள நிலையில், மேலும் ஒரு மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத்தின் வதோதராவில் இயங்கும் டைமண்ட் பவர் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் (DPIL) என்ற  நிறுவனம், 2654 கோடி ரூபாய் அளவில், வங்கியின் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது.

டிபிஐஎல் நிறுவனத்துக்கு  11 வங்கிகள் கடன் வழங்கியுள்ளதாகவும், மொத்தம் 2654 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்தவில்லை என வங்கிகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில், டி.பி.ஐ.எல். நிறுவனத்தின் மதும், அதன்  உரிமையாளர் எஸ்.என். பட்னாகர் மற்றும் இயக்குநர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.