முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணி மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு!

டில்லி:

சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமனி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதி மன்ற  தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி, மேகாலாய மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில்,  தஹில் ரமணி,  தஹில் ரமானி மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை இந்திய உளவு அமைப்பான ஐ.பி. கூறியுள்ளது. சென்னையில் செம்மஞ்சேரி மற்றும் திருவிடந்தை ஆகிய இடங்களில் தஹில் ரமானி 2 அடுக்குமாடி வீடுகளை கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வாங்கி இருக்கிறார். இதன் பின்னணியில் முறைகேடு இருப்பதாக ஐ.பி. குற்றம் சாட்டி இருக்கிறது. இதுபற்றி 5 பக்க அறிக்கையை ஐ.பி. உளவு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் வழங்கி இருக்கிறது. அதுபோல,  சிலைக் கடத்தல் தடுப்பு விசாரணை சிறப்பு அமர்வை கலைத்ததாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தும் வகையில், தஹில் ரமணி மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் தொடர்பாக 2018-ம் ஆண்டு கோர்ட்டு சிறப்பு விசாரணை மன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி மகாதேவன் தலைமையிலான இந்த மன்றம் சிலை கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விசாரணை தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பொன்.மாணிக்கவேலை முடுக்கி விட்டு பல சிலை கடத்தல்களை கண்டுபிடித்தது.

இந்த நேரத்தில் சிலை கடத்தல் சிறப்பு விசாரணை மன்றத்தை அப்போதைய தலைமை நீதிபதியான தஹில் ரமானி கலைத்து உத்தரவிட்டார். இதன் பின்னணியில் தான் தவறு நடந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CBI files FIR, former Madras High Court chief judge, madras high court, Madras High Court chief judge, Ranjan Gokai, Tahilramani
-=-