ஏர் ஏசியாவின் இந்திய தலைவருக்கு சிபிஐ சம்மன்

டில்லி:

சர்வதேச அளவில் விமானங்களை இயக்க உரிமம் பெற விதிமீறலில் ஈடுபட்டதாக மலேசியாவின் ஏர் ஏசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்ணான்டஸ், டிராவல்ஃபுட் உரிமையாளர் சுனில் கபூர், ஏர் ஏசியா இந்திய பிரிவு இயக்குநர் வெங்கடரமணன், விமானத்துறை ஆலோசகர் தீபக் தல்வார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்என்ஆர் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திர துபே மற்றும் சில அரசு அதிகாரிகளின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அந்நிறுவன இந்திய பிரிவு தலைவர் வெங்கடரமணன் ஜூலை 3-ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ இன்று சம்மன் அனுப்பியது.