தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ.1.14 கோடி கொடுத்த சிபிஐ இயக்குனர் மனைவி…. பரபரப்பு

டில்லி:

சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் மனைவி, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 3 தவணையாக  ரூ 1.14 கோடி கொடுத்துள்ளதாக  நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சிபிஐ இடைக்கால இயக்குனராக இணை இயக்குனர் நாகேஸ்வரரவ் நியமிக்கப்பட்டடார்.

ஏற்கனவே சிபிஐ இயக்குனர்களாக இருந்த அலோக் வர்மா மற்றும் ராகேஸ் அஸ்தானா இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுக்கள் கூறி வந்தனர். தொழிலதிபர் மொயின் குரேஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கை முடித்து வைக்க அஸ்தானா பணம் பெற்றதாக கூறப்பட்டது.  இதன் காரணமாக இருவரையும் விடுமுறையில் செல்ல மத்திய அரசு பணித்த நிலையில், இடைக்கால இயக்குனர் நியமிக்கப்பட்டும், சிபிஐ அதிகாரிகளும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போதைய சிபிஐ இடைக்கால இயக்குனர் மீதும் நிதி முறைகேடு புகார் எழுந்துள்ளது. அவரது மனைவி சந்தியாமீது கம்பெனிகள் பதிவு துறை அலுவலகம் குற்றம் சாட்டி உள்ளது.

சிபிஐ இடைக்கால இயக்குனராக இருந்து வரும் நாகேஸ்வர ராவின் மனைவி  எம்.சந்தியா கடந்த 2011ம் ஆண்டு  ஏம்பிஎல் நிறுவனத்திடம் இருந்து. 25 லட்சம் கடன் வாங்கியதாகவும், ஆனால்,  2012 மற்றும் 2014ம் ஆண்டுகளிலும் 3 தடவையாக  ஏஎம்பில் நிறுவனத்துக்கு அவர் ரூ.1.14 கோடி கடனாக கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகேஸ்வரராவ் சிபிஐ இடைக்கால இயக்குனராக பதவி ஏற்றுள்ள நிலையில், நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகம்  (ROC) பராமரித்து பதிவேடுகளில், நாகேஸ்வரராவ் மனைவிக்கும்,  ஏஞ்செலா மெர்கன்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் (AMPL)   என்ற நிநி நிறுவனத்துக்கும் இடையே நிதி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த நிறுவனம் கொல்கத்தாவை சேர்ந்தது என்றும், இந்த நிறுவனத்தில், நாகேஸ்வரராவ் மனைவி சந்தியா 2011 முதல் 2014ம் வரை நிதி பரிவர்த்தனை மேற்கொண்டிருப்பதாக கூறி உள்ளது.

இந்த ஏம்பிஎல் நிதி நிறுவனத்தில் ராவ் மனைவி எம்.சந்தியா ரூபாய் 25 லட்சம் கடன் வாங்கியதாக பதிவுகள் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ள நிலையில்,  2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் முடிவடைந்த நிதி ஆண்டுகளுக்கு இடையே ராவின் மனைவி சந்தியாவுக்கும், ஏஎம்பில் நிறுவனத்துக்கும் இடையே 3 முறை நடைபெற்ற பரிவர்த்தன காரணமாக  ரூ. 1.14 கோடி சந்தியா ஏஎம்பில் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முதல் தவணையாக, 2012ம் ஆண்டு  35.56 லட்சமும், 2வது தடவையாக 2013ம் ஆண்டு ரூ. 38.27 லட்சம் 3வது தடவையாக 2014ம் ஆண்டு, ரூ. 40.29 லட்சமும் கொடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக ஏஎம்பில் நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.