எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு: சிபிஐ விசாரணை எதிர்த்த மேல்முறையீடு மனு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

டில்லி:

முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கை உச்சநீதி மன்றம் இன்று விசாரணை செய்கிறது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக திமுக தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உள்ள நிலையில், லஞ்சஒரிப்பு துறை சார்பிக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை  நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என்று தெரிவித்து உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இதற்கிடையில், திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் கடந்த வாரம் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  முதல்வருக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று திமுக தரப்பில் தெரிவித்துள்ளது.