குட்கா முறைகேடு வழக்கு:  மத்திய அரசு அதிகாரிகள் இருவரது வீடுகளில் சிபிஐ சோதனை

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள், இந்நாள் மத்திய அரசு அதிகாரிகள் இருவரது இல்லங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், கலால் வரி அதிகாரி நவநீதகிருஷ்ணன் பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலரது வீடுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜி.எஸ்.டி. இணை இயக்குனர் செந்தில் வேலவன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கலால் வரித்துறை நுண்ணறிவுப் பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஸ்ரீதர் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.