சிபிஐ ஊழியர்களுக்கு 3 நாட்கள் வாழும் கலை யோகா பயிற்சி

டில்லி

சிபிஐ ஊழியர்களுக்கு யோகா மாஸ்டர் ரவிசங்கரின் வாழும் கலை யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பாஜக அரசு யோகா பயிற்சிக்கு முன்னுரிமை அளித்து வருவது தெரிந்ததே. மத்திய அரசின் பல துறை பணியாளர்களுக்கும் இத்தகைய பயிற்சிகளை அரசு அளித்து வருகிறது. அவ்வகையில் சிபிஐ ஊழியர்களுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்காரின் வாழுக் கலை யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில் “சிபிஐ நிர்வாகம் தங்கள் ஊழியர்களின் நேர்முகத் தன்மை மற்றும் திறனை அதிகரிக்க வரும் 10, 11, மற்றும் 12 ஆம் தேதிகளில் மூன்று நாள் வாழும் கலை பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் ஊழியர்கள் தங்கள் திறன் மற்றும் நேர்முகத் தன்மையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இந்த பயிற்சிகளின் மூலம் ஊழியர்கள் தங்கள் முழுத் த்றனையும் வெளிக் கொணர முடியும் இந்த பயிற்சிக்காக ஆய்வாளரில் இருந்து பொறுப்பு இயக்குனர் வரையிலான 150 ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.