2 கோடி ஊழல் குற்றச்சாட்டு: கெஜ்ரிவாலுக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிபிஐ

டில்லி:

ம்ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது கூறிய ரூ.2 கோடி ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையில், எந்தவிரத ஆதாரமும் இல்லை, முறைகேடும் நடைபெறவில்லை என்று சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.

அதுபோல, முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தும் லோக்ஆயுக்தாவும், இந்த ஊழல் வழக்கை முடியது.

’ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அவரது கட்சியை  சேர்ந்த சத்யேந்தர் ஜெயின் என்பவரிடம் இருந்து ரூ.2 கோடி பணம் வாங்கினார் என்றும், அதை  தான் நேரடியாக பார்த்ததாகவும், ஆம்ஆத்மி கட்சி மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து  நீக்கப்பட்ட கபில்மிஸ்ரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கபில் மிஸ்ரா அமைச்சர் பொறுப்பில் இருந்து  நீக்கப்பட்ட அடுத்த நாளே இந்தக் குற்றச்சாட்டு கூறியதால் இந்த பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது. ஆனால்,  டில்லியில் தவறாகக் கையாளப் பட்ட குடிநீர் பிரச்னையால் தான் டில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வி யுற்றது. அதன் காரணமாகவே கபில் நீக்கப்பட்டார்’ என துணைமுதல்வர் தெரிவித்திருந்தார்.

ஆனால், மிஸ்ராவோ  கெஜ்ரிவால் மீதுகுற்றச்சாட்டக்களை கூறி வந்தார். இந்த நிலையில் ரூ.2 கோடி ஊழல் குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த ஊழல் சம்பந்தமாக கெஜ்ரிவால் மீது லோக்ஆயுக்தா அமைப்பும் விசாரணை மேற் கொண்டது. தற்போது சிபிஐ, தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எந்தவிதமான முறைகேட்டிலும் கெஜ்ரிவால் ஈடுபட வில்லை என்று அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.

அதுபோல லோக்ஆயுக்தா அமைப்பும், இந்த குற்றச்சாட்டில் மூகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.