ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்து சிபிஐ விசாரணை தேவை!! ஸ்டாலின்

சென்னை:

மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா கைரேகை வைத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை யாரும் சந்திக்காதபோது 3 தொகுதி இடைத்தேர்தலில் கைரேகை பெற்றது எப்படி?. தன் கைவசம் இருந்த இலாகாக்களை பன்னீர்செல்வத்திற்கு மாற்ற ஆளுநருக்கு அறிவுரை வழங்கி ஜெயலலிதா கையெழுத்திட்டாரா?

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தாமதமின்றி உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவை அப்போலோவில் யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் சீனிவாசன் கூறியிருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.