டில்லி

சிதம்பரம் இல்லத்தில் அவரைக் கைது செய்ய மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.

ஐ என் எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுகளைப் பெற விதிகளை மீறி சலுகைகள் அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மீதும் சிதம்பரத்துக்கு உதவி செய்ததாகக் குற்றச் சாட்டு அளிக்கப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார். சிபிஐ விசாரணையை ஒட்டி ப சிதம்பரம் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இருந்தார்.

நேற்று டில்லி உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதையொட்டி சிபிஐ அதிகாரிகள் நேற்று டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிற்குச் சென்று அவரை தேடினார்கள். அங்கு அவர் இல்லாததால் அவர் வீட்டு வாசலில் இரண்டு மணி நேரத்துக்குள் சிபிஐ உதவி சூப்பிரண்ட் அலுவலகத்துக்கு சிதம்பரம் விசாரணைக்கு வர வேண்டும் என நோட்டிசை ஒட்டியது.

அந்த இரண்டு மணி நேர அவகாசம் தாண்டியும் ப சிதம்பரம் இன்னும் ஆஜராகாமல் உள்ளார். அதை அடுத்து மீண்டும் சிபிஐ அதிகாரிகள் டில்லியில் உள்ள ப சிதம்பரம் இல்லத்துக்கு வந்துள்ளனர். இது அரசியல் உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.