கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா சி.பி.ஐ அதிகாரிகள் கலக்கம்

 

பெங்களூரு :

ர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், இவர் பெங்களூரு புறநகர் தொகுதி எம்.பி. ஆக உள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக டி.கே. சிவகுமார் மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த மூன்றாண்டுகளில் நடைபெறும் நான்காவது சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த டி. கே. சிவகுமாரின் தாயார் கௌரம்மா “என் மகன் மீது சி.பி.ஐ அதிகாரிகளுக்கு அன்பு அதிகம் அதனால் தான் அடிக்கடி வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டி.கே. சுரேஷ் எம்.பி. தனக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்துக்கொள்ள கேட்டுக்கொள்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இது சி.பி.ஐ. அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.