ராமநாதபரம்:

திமுக எம்.பி. அன்வர் ராஜா தலைவராக  உள்ள தமிழக வக்ஃபு வாரியத்தில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்வர் ராஜா

அதிமுகவை சேர்ந்த  அன்வர்ராஜா  போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமநாதபுரம்  தொகுதியில்  மீண்டும் அவர்  போட்டியிட அன்வர்ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.  மேலும், அந்த தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், வக்ஃபு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அன்வர் ராஜா எம்.பி. யிடமும், தலைமை அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதன் தலைவராக தற்போதைய ராமநாதபுரம் தொகுதி  எம்.பி. அன்வர் ராஜா இருந்து வருகிறார். வக்ஃபு வாரியத்தில் பல்வேறு முறைகேடு, ஊழல் நடந்துள்ளதாக கூறி தொடரப்பபட்ட வழக்கில், ,  சிபிஐ விசாரணைக்கு  உயர் நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் இன்று திடீரென ரெய்டு நடத்தினர். மேலும் அன்வர் ராஜா எம்.பி.யி டமும் சிபிஐ விசாரணை நடத்தினர். இது  பெரும் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முத்தலாக் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு எதிராக அன்வர் ராஜா கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது அவருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிருப்தியில்  இருந்து வரும் அன்வர் ராஜாவுக்கு, தற்போது நடைபெற்ற சிபிஐ ரெய்டு மற்றும் விசாரணை மேலும் மனவருத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்றும், மாற்றுக்கட்சிக்கு தாவுவதற்கும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.