டில்லி : அமைச்சர் இல்லத்தில் சி பி ஐ ரெய்டு

டில்லி

சி பி ஐ டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சத்யேந்தர் மீது பணமோசடி குற்றம் சிபிஐ குழுவினரால் பதியப்பட்டுள்ளது. கடந்த 2015-16 ஆம் வருடம் பிரயாச் இன்ஃபோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அகின்சன் டெவெலப்பர்ஸ் பி லிமிடெட், மற்றும் மங்கள்யாதன் பி லிமிடெட் என பெயர் கொண்ட மூன்று நிறுவனங்கள் மூலமாக ரூ 4.63 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணையின் முடிவுகள் அமைச்சருக்கு எதிராகவே உள்ளன.

அதையொட்டி இன்று அமைச்சர் வீட்டில் ரெய்டு நடை பெறுகிறது,   அமைச்சரின் மனைவியிடமும் விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லத்தில் சி பி ஐ ரெய்டு நடை பெற்றதும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிபிஐ யின் விசாரணை வளையத்துள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது