“தமிழகத்தை கைப்பற்றவே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. மூலம் சோதனை நடத்துகிறது மத்திய பாஜக அரசு” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடந்துவருகிறது. இந்தத் தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, அங்கு வந்தார்.

செய்தியாளர்களிடம் அவர், “தமிழ்நாட்டை கைப்பற்ற பாஜக நினைக்கிறது. அக்கட்சிக்கு பதில் சொல்ல சரியான நபர் ப.சிதம்பரம். மட்டும்தான். இதனால் மத்திய பாஜக அரசு சி.பி.ஐ மூலம் வேண்டுமென்றே சிதம்பரம் வீட்டில் நடக்கிறது.

தற்போது சோதனை நடந்தவருகிறது. சோதனையில் என்ன கிடைக்கிறது என்பதைப் பார்ப்போ்ம். பிறகு பேசலாம்” என்று ராமசாமி தெரிவித்தார்.