ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீட்டை இந்தியா கொண்டுவர அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உதவியதாகவும் அதற்காக அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இன்று சிதம்பரம் மற்றும் கார்த்தி வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த சோதனை குறித்து ப சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சட்ட விதிகளுக்கு உட்பட்டே  நேரடி அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. .ஒவ்வொரு வருடமும் இது போல நூற்றுக்கணக்கான அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்” என்று ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், “இந்த உத்தரவில் 5 செயலாளர்கள் கையெழுத்திட்டனர்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என் வீட்டில் மட்டும் சோதனை நடத்துவது ஏன்?” “ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு,  “தவறான குற்றம் சாட்டி தன் மீதும், தனது மகன் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், எழுத்தாளர்கள் மீதும் மத்திய பாஜக அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சி.பி.ஐ. அமைப்பை பாஜக தவறாக வழிநடத்துகிறது” என்றும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.