ஆட்சி உரிமை கோரிய காங். தலைவருக்கு சி.பி.ஐ. சம்மன்..

ஆட்சி உரிமை கோரிய காங். தலைவருக்கு சி.பி.ஐ. சம்மன்..
மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
அந்த ஆட்சிக்கு அளித்த வந்த ஆதரவை 9 எம்.எல்.ஏ.க்கள் திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டனர். அவர்களில் 3 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் அடக்கம்.
இதனால் மணிப்பூரில் பா.ஜ.க.. கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்ட 9 பேரும், காங்கிரஸ் அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல் –அமைச்சர் ஐபோபி சிங் , மணிப்பூரில் புதிய அரசு அமைக்க உரிமை கோரியுள்ளார்.
இந்த நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் Nuஐபோபி சிங்கை நெருக்கி உள்ளனர்..
மணிப்பூர் மேம்பாட்டுச் சங்கத்தில் கடந்த 2009- 2017 ஆம் ஆண்டில் ஐபோபி ,தலைவராக இருந்தார். அப்போது சங்கத்துக்குச் சொந்தமான பணத்தை முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
அந்த வழக்கு விசாரணைக்கு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புதன்கிழமை ( இன்று) ஆஜராகுமாறு ஐபோபிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
மணிப்பூரில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஐபோபி சிங், மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பா.பாரதி

கார்ட்டூன் கேலரி