Random image

பேஸ்புக் தகவல் திருட்டு……கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனத்துக்கு சிபிஐ கடிதம்

டில்லி:

பேஸ்புக் தகவல்கள் திருடியது தொடர்பாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்படும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ பேஸ்புக்கில் உள்ள 5 கோடிப் பேரின் தகவல்களை திருடியது தெரியவந்தது, அமெரிக்க தேர்தலில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியது. இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டதாக புகார் எழுந்தது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மற்றும் ‘குளோபல் சயின்ஸ் ரிசர்ச்’ போன்ற நிறுவனங்கள் பேஸ்புக் நிறுவன உதவியுடன் இந்த தகவல் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, குளோபல் சயின்ஸ் ரிசர்ச் ஆகிய நிறுவனங்களுக்கு சிபிஐ தற்போது கடிதம் எழுதியுள்ளது.

முதற்கட்ட விசாரணை முடிந்த பின்னரே இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ. முடிவு செய்யும்.