டில்லி

ரி செலுத்துவோரில் ஆதார் அடையாளம் தேவைப்படாத பிரிவினர் யார் யார் என மத்திய  மறைமுக வரி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வருமான வரி, ஜிஎஸ்டி போன்ற நேரடி வரிகளுடன் பல மறைமுக வரிகளும் விதிக்கப்படுகின்றன.  இந்த வரிகளைச் செலுத்துவோர் தங்களது கணக்குகளை அரசுக்குத் தாக்கல் செய்வது அவசியமாகும்.  இதற்கு ஆதார் எண் அடையாளம் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இந்நிலையில் மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மறைமுக மற்றும் ஆயத்தீர்வை வரி ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில் ஜிஎஸ்டி குழுவின் பரிந்துரைப்படி ஆதார் அடையாளம் தேவைப்படாத பிரிவினர் எனச் சிலரை அறிவித்துள்ளது.

 அவர்கள்

  1. இந்திய குடிமகன் அல்லாதோர்
  2. மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் துறைகள்
  3. உள்ளூர் நிர்வாக அமைப்புக்கள்
  4. சட்ட அமைப்புக்கள்
  5. அரசுத்துறை நிறுவனங்கள்
  6. ஆதார் தேவைப்படாத பிரிவின் கீழ் வர விண்ணப்பித்துள்ளவர்கள்

ஆவார்கள்.