2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானதல்ல! ஜெயக்குமார்

சென்னை,

2ஜி வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு இறுதியான தீர்ப்பு அல்ல என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்பட  அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபிஐ  நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 2 ஜி தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது. இது இறுதியான தீர்ப்பும் இல்லை. இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளன. எனவே, மேல்முறையீடு செய்யும்போது நல்ல தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.