புதுடெல்லி:

சிபிஐ இயக்குனர் பதவிக்கு தகுதி பெற்ற ரினா மித்ராவை, மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், திறமையான அந்த அதிகாரியை மேற்கு வங்க மாநில அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது.


மத்திய பிரதேசத்தில் 1983- ஆண்டு பணியமர்த்தப்பட்ட ரினா மித்ரா சீனியாரிட்டியின் படி, சிபிஐ இயக்குனராவதற்கு அனைத்துத் தகுதியும் பெற்றிருந்தார்.

ஆனால், அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை காத்திருந்த மத்திய அரசு, மறுநாளே புதிய சிபிஐ இயக்குனரை நியமித்தது.

இந்நிலையில், ரினா மித்ராவை மேற்கு வங்க மாநிலத்தின் உள்நாட்டு பாதுகாப்பு முதன்மை செயலாளராக மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது.

:þஇது குறித்து மித்ரா கூறும்போது, இன்னும் எனக்கு உத்தரவு வரவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு என்பதால், அதற்கான உத்தரவு வந்ததும், ஒரு சில நாட்களில் எனக்கான பொறுப்புகளை நான் ஏற்பேன் என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த பதவிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் விருப்பத்தின் பேரிலேயே ரினா மித்ரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.