10, 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் சொந்த ஊரிலே தேர்வெழுதலாம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

10,12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடக்கிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது: 10 , 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள், தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதிக்கொள்ளலாம். அதன்படி, மாணவர்கள் முன்பு தேர்வு எழுதிய மையங்களுக்கு செல்ல தேவையில்லை என்று கூறி உள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூன் 1ம் தேதிக்கு பிறகு அது நீட்டிக்கபடுமா? தளர்வுகளில் மாற்றங்கள் வருமா? என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், தொலைவில் சென்று தேர்வுகளை எழுதும் போது ஏற்படும் சிரமத்தை போக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.