10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்தது. இதனிடையே, 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும். தேர்வுக்கான தேதிகளும், தேர்வு கால அட்டவணையும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

You may have missed