சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது: 97.37 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சென்னை 2வது இடம்

--

டில்லி:

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும்  பிற்பகல் 2 மணி அளவில் இணையதளத்தில் வெளியானது. இந்த தேர்வில்  86.7 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்த தேர்வு முடிவில்  97.37 சதவிகிம் பேர் தேர்ச்சி பெற்று சென்னை 2வது இடத்தை கைப்பற்றி உள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு  கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 4ம் தேதி முடிவடைந்தன. நாடு முழுவதும் 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இனறு மாலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம்  86.7 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின்  திருவனந்தபுரம்- 99.60  சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும்,  97.37 சதவிகிம் பேர் தேர்ச்சி பெற்று சென்னை 2வது இத்திலும்,  91.86 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று அஜ்மீர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும், இந்த தேர்வில்,  500க்கு 499 மதிப்பெண் எடுத்து மொத்தம் 4 மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

குருகுரம் கிராமத்திலிருந்து பிரகார் மிட்டல்
பிஜ்னாரில் இருந்து ரிம்சிம் அர்காரால்
ஷம்லிவிலிருந்து நந்தினி கார்க்
கொச்சின் இருந்து ஸ்ரீலக்ஷ்மி ஜி

ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in மற்றும் results.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.