சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

டெல்லி:

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 8 லட்சத்து 86 ஆயிரத்து 506 மாணவ- மாணவிகள் தேர்வை எழுதினர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை (3-ம் தேதி) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.