சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது…91.01 சதவிகிதம் பேர் தேர்ச்சி

டில்லி:

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவை சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 91.01 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் வெளியிடப் பட்டது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  இவர்களில் 91.01 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகள்

www.cbse.nic.in,

www.cbseresults.nic.in,

examresults.net, digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.